விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் All Things Are Possible To Him That Believeth ஷ்ரெவ்போர்ட் லூசியானா, அமெரிக்கா 56-07-22 1. பிற்பகலில் தொடர்ச்சியாக நான் ஜெபத்தில் தரித்திருக்கிறேன். பின்பு இங்கே வந்து நான் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறேன். அப்பொழுது....(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) உங்களிடம், கூட்டத்தில் சரியாக இருக்கும் ஏதோவொன்று இல்லை போன்றிருக்கிறது. நான்- நான் தரிசனங்களை சுலபமாக காண்பதில்லை, ஏனெனில் அவை இரண்டு வெவ்வேறு அபிஷேகங்கள். அவைகளில் ஒன்று, நீங்கள் உள்வாங்கி கொள்வதாயும், மற்றொன்று நீங்கள் வெளியே கொடுப்பதாயும் இருக்கிறது. பாருங்கள்-? அவைகளில் ஒன்று. நீங்கள் பிரசங்கிக்கும் போது நீங்கள் மிகவும் அற்புதமாகவும் மகிழ்ச்சியாகவும் உணருகிறீர்கள்; மற்றொன்றில், நீங்கள் அதை பெற்றுக் கொள்ளும் போது, நீங்கள் பெலவீனமாகி, பெலவீனமாகிக் கொண்டே போகிறீர்கள். பாருங்கள்-? ஒன்று, நீங்கள் எதை வாஞ்சிக்கிறீர்களோ அதை தேவன் இடத்திலிருந்து நீங்கள் இழுத்துக் கொள்ளுகிறீர்கள். மற்றொன்று தேவன் தம்முடைய வார்த்தையினூடாக அதை உங்களுக்கு கொடுப்பதாய் இருக்கிறது. பாருங்கள்-? அவைகளில் ஒன்று தரிசனம், மற்றொன்று வார்த்தையை பிரசங்கிப்பது. 2. இப்பொழுது, தேவன் நமக்கு சூழ்நிலையை கொடுக்கும்படி ஒரு சிறிய வார்த்தையை, அது பரிசுத்த மாற்கில் இருக்கிறது. அதை நாம் பரிசுத்த மாற்கு 9-ஆம் அதிகாரத்தில் எடுத்து வாசிப்போம், நல்லது, இந்த கூட்டத்திற்காக ஒரு வசனம். நாம் 23-ஆம் வசனத்தை எடுப்போம், இயேசு அவனை நோக்கி, நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். அதுதான் நம்முடைய சங்கீதம். இப்பொழுது, அது இதைக் குறித்த எல்லா சந்தேகங்களையும் எடுத்துப் போடுகிறது, இல்லையா-? "அது உம்முடைய சித்தமானால்-?", அவர் கூறினார், "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று". "உங்களுடைய சித்தமா அல்லது இல்லையா" என்றல்ல, உங்களுக்கு விசுவாசம் இருந்தால், அது அவருடைய சித்தமாயிருக்கிறது. அதற்காக மரித்த கர்த்தராகிய இயேசுவினால்... அவரால் உங்களுக்கு எல்லாமுமே இலவசமாக அளிக்கப்பட்டிருக்கிறது (ஒலி நாடாவில் தன்னுடைய பலியினாலும் சபைக்கு கொண்டு வந்தார். மேலும் காலியிடம் ஆசி).. விழுந்து, கிறிஸ்து தன்னுடைய நீதியினாலும், இப்பொழுது நம்மிடம் நம்முடைய முழுமையான விடுதலையின் அச்சாரமிருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன், ஒரு மனிதன் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான், அவன் 'சகோதரன் பிரான்ஹாமே. நீங்கள் எப்படி புத்திசாலித்தனமாக தெய்வீக சுகமளித்தலை பாவ நிவர்த்திக்குள் சேர்க்கிறீர்கள்" என்றான், நான் கூறினேன்" ஒவ்வொரு மீட்பிற்குரிய ஆசிர்வாதத்தையும், ஒவ்வொன்றையும் நான் பாவ நிவர்த்திக்குள் சேர்ப்பேன்" என்றேன். 3. இப்பொழுது, இயேசு இரண்டு முறை இரத்தம் சிந்தவில்லை தேவைப்படுகிற தெய்வீக சுகமளித்தலையும் மற்றும் ஒவ்வொரு அல்லது அவர் இரண்டு முறை மரிக்கவில்லை; ஆனால் உனக்கு ஆசிர்வாதத்தையும் ஒரே பாவ நிவர்த்தியினால் உனக்காக செய்து முடித்தார். அது சரி. வியாதியை பார்க்காமல் உங்களால் பாவத்தை மட்டும் பார்க்க முடியாது. தங்களுடைய ஆத்துமாவிற்கென விசுவாசிப்பவர்களுக்கு நீங்கள் இரட்சிப்பின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, நீங்கள் தெய்வீக சுகமளித்தலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பாவத்தின் ஒரு தன்மை தான் வியாதி. நம்மிடம் எந்த பாவமும் இல்லாததற்கு முன்பு, நம்மிடம் வியாதியே கிடையாது. பாவத்தின் விளைவாக வியாதி வருகிறது. ஆகவே உங்களால் வியாதியை பார்க்காமல் பாவத்தை மட்டும் பார்க்க முடியாது. உங்களால் அப்படி செய்யவே முடியாது. இப்பொழுது, இவன் கூறினான், 'சகோதரன் பிரான்ஹாமே, சுவிசேஷத்தின் மூலம் உங்களுக்கு நான் அதை நிரூபித்தால்." என்றான். சார்லஸ் புல்ளர், இந்த கௌபாய் (cowboy) பாடகன், புதிதாக கிறிஸ்தவத்திற்குள் மாற்றப்பட்டவன், இந்த அருமையான பாடல்களை எழுதுபவன்.... சரியாக இப்பொழுது அவனுடைய பெயர் என் நினைவிற்கு வரவில்லை. ஓ. அவன்.... ஸ்டுவார்ட் ஹாம்ப்லென். நாங்கள் எங்களுடை... அந்த இடத்தில் அவர்கள் எல்லாரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அப்பொழுது தான் நகரத்தை விட்டு சென்றிருந்தனர். எனவே நான் உள்ளே சென்றேன், அவன் "நல்லது, நீங்கள் ஏன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது-?" என்றான். 4. சாமர்த்தியமும் கல்வியறிவும் கொண்ட மேலாளரையும் மற்றவர்களையும் வெளியேற்றின பின்பு அவன்... எனக்கு கல்வியறிவு கிடையாது என்பது அவனுக்கு தெரியும், எனவே அவன் என் மீது இரண்டு கால்களையும் வைத்து ஏறி நின்று விடலாம் என்று நினைத்தான். ஆகவே அவன் "உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்..." என்றான். அவன் மேலாளரிடம், 'நான்- நான் சகோதரன் பிரான்ஹாமை இன்னும் இரண்டு புகைப்படங்கள் அதிகமாக எடுக்க விரும்புகிறேன். உங்களிடம் நிச்சயமாக நான் அழைத்து..." என்றான். அவன் கூறினான் "நான் எடுத்த போது...”என்றான். "இன்றிரவு கூட்டத்திற்கு ஆயத்தமாவதற்கும், ஜெபிப்பதற்கும் சகோதரன் பிரான்ஹாமுக்கு சரியாக இருபத்தி ஐந்து நிமிடங்கள் இருக்கிறது" அவன், “சகோதரன் பாக்ஸ்டரே, உங்களுக்கு நான் வாக்களிக்கிறேன், அவரை நான் சரியாக அங்கே அழைத்து வந்து விடுவேன்” என்றான். "சரி" என்று அவர் போய் விட்டார். பின்பு கொஞ்ச நேரத்தில்... வெளியே சென்றபின், "உங்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான். நான் நினைத்தேன், "ஓ, எனக்கு தெரியும் நீ - நீ முழு வீச்சாகருக்கிறாய்"என்று. ஆகவே அவன், "நீங்கள் பொருத்துகிறீர்களா, தெய்வீக சுகமளித்தலை பாவ நிவர்த்திக்குள் பொருத்துகிறீர்களா-?" என்றான். நான், 'ஆம், ஐயா. நான் பொருத்துகிறேன்' என்றேன். அவன் புதிதாக செமினரியில் இருந்து வந்தவன், வெளியே வரும் எல்லா சாமர்த்தியசாலிகளை போன்று அவனும் சாமர்த்தியமானவன். அவன், "நல்லது, நீங்கள் பொருத்தினால், தெய்வீக சுகமளித்தலை பாவ நிவர்த்திக்குள் பொருத்தினால், சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள்" என்றான். "எனக்கு அப்படி தோன்றவில்லை” என்று நான் நினைத்தேன். 5. அவன், "நல்லது.. எப்படி பாவம் பாவநிவர்த்திக்குள் உள்ளடங்கி இருக்கிறதோ; அதற்காகத் தான் பாவ நிவர்த்தி செய்யப்பட்டது. அதுபோல தெய்வீக சுகமளித்தலும் பாவ நிவர்த்திக்குள் உள்ளடங்கியிருந்தால்" நமக்கு வலி என்பதே இருக்காதே. இது அதற்குள் இருந்திருந்தால் -தெய்வீக சுகமளித்தல் பாவ நிவர்த்திக்குள் இருந்திருந்தால், வலி நீக்கப்பட்டிருக்குமே, ஏனெனில் எல்லா விளைவுகளையும் பாவ நிவர்த்தியானது பாவத்தை கொன்று விட்டதே' என்றான். நான் நினைத்தேன், 'சகோதரனே, உன்னிடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். ஒன்று தவறு என்று நன்கு அறிந்திருந்தும் அதை செய்ய வேண்டும் என்கிற இச்சை இருக்கிறதா (temptation)-?" என்றேன். அவன்,"ஆம்" என்றான். "அப்படியானால் வலியுமிருக்கிறது". அது சரி. நிச்சயமாக, நிச்சயமாக. உன்னுடைய விசுவாசம் தான் அதை மேற்கொள்கிறது. நிச்சயமாக உன்னுடைய விசுவாசம் தான் அதை செய்கிறது, அது தான் பதில். எனவே அவன், அவன் கூறினான் "நல்லது, நான் செய்தால்...-? என்றான் [ஒலி நாடாவில் காலியிடம் ஆசி] அவர் எடுத்தார் என்று ஏசாயா கூறினான்..-?... [ஒலி நாடாவில் காலியிடம் ஆசி] அவருடைய தழும்புகளால் [ஒலி நாடாவில் காலியிடம் ஆசி] வேதாகமத்தை கொண்டு நிரூபித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா-?" என்றான். நான், "ஆம், ஐயா, வேதாகமம் அப்படி கூறினால், அப்பொழுது அப்பொழுது அது சரி தான்" என்றேன். 6. அவன், "நல்லது, மத்தேயு 8-ல், வேதாகமம் கூறுகிறது, "வியாதியஸ்தர்களையும், உபத்திரவப்படுகிறவர்களையும் இயேசுவினிடத்தில் அவர்கள் அழைத்து வந்த போது, அதாவது ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி அவர் நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டார்" என்றான். நான் கூறினேன்... அவன் கூறினான், "சகோதரனே, இப்பொழுது அது உங்களுக்கு புரிகிறதா-? அதிலிருக்கும் ஒவ்வொன்றும் சரியாக அங்கே தான் நிறைவேறியது" என்றான். நான், "நல்லது, சகோதரனே, அது பாவ நிவர்த்தி செய்யப்படுவதற்கு முன்னமே, அதாவது ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கு முன்பாக நடந்தது. அது இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன்பே நடந்தது. அந்த நேரத்தில் பாவ நிவர்த்தி என்று ஏதும் இல்லை. அப்படியானால் உங்களுடைய உபதேசத்தின்படி பார்த்தால், பாவ நிவர்த்தி செய்யப்படுவதற்கு முன்னமே, அது அதிக பலனை அளித்தது, அது இந்த பக்கம் பாவ நிவர்த்தியானதற்கு பின்பு அளித்ததைவிட அப்பொழுதே அதிக பலனை அளித்ததே என்றேன். ஆகவே அப்பொழுது அவன், என்னுடைய கல்வியறிவு குறைவு என்பதைக் கண்டு, பெரிய பெரிய வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்தான். நான் “எனக்கு இன்னும் வியாக்கியானிக்கும் வரம் கிடைக்கவில்லை" என்றேன். நான் கூறினேன், "என்னிடம் நீ எளிமையான மொழியில் பேசு, அப்பொழுது உனக்கு நான் உத்தரவு சொல்லுகிறேன்” என்றேன். அவன் பேசிக் கொண்டே போனான். நான் கூறினேன்... அவன் கூறினான் "ஓ, அது பாவ நிவர்த்தியில் இருக்கிறது, என்று பேசிக் கொண்டே போனான்" நான், "சகோதரனே, உன்னிடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். தெய்வீக சுகமளித்தல் வார்த்தையில் இருக்கிறது என்பதை நீ விசுவாசிக்கிறாயா" என்றேன். 7. அவனை நான் சரியாக இங்கே மாற்கு 11:24 -ற்கு கொண்டு வர இருந்தேன். இயேசு, "நீங்கள் ஜெபம் பண்ணும் போது, எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்றார்". அது என்னவாய் இருந்தாலும் பொருட்டல்ல. நான், "இயேசு அதை வார்த்தையில் பொருத்தினாரா, தெய்வீக சுகமளித்தல் வார்த்தையில் இருக்கிறதா-?" என்றேன். அவன், "ஆம், அவர் 'எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ என்று குறிப்பிட்டிருக்கிறார்'"' என்றான். "நான், "அது சரி" என்றேன். நான், "அப்படியானால் அவர் அதை வார்த்தையில் வைத்திருந்தால், வார்த்தையானது பாவ நிவர்த்திக்கு முன்னரே இருக்கிறதே" என்றேன். "ஓ" அவன் கூறினான் "அது முட்டாள்தனமானது, சகோதரன் பிரான்ஹாமே” என்றான். 'இல்லை, ஐயா" என்றான். ”அது பரிசுத்தக் குலைச்சல்” என்றான். நான். "ஓ இல்லை. அது பரிசுத்தக் குலைச்சல் இல்லை. என்றேன். நான் கூறினேன், "அவர்--அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ள வேண்டும்” என்றேன். அவன் கூறினான்... "நல்லது, உன்னிடத்தில் நான் ஒன்றைக் கூற போகிறேன். முன்னொரு காலத்தில் ஒரு ராஜா ஒரு பெரிய இராஜ்ஜியத்தை கொண்டிருந்தான். அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும், அவன் சட்டதிட்டங்களை ஏற்படுத்தியிருந்தான், தண்டனைகளையும் மற்றவைகளையும், அவன் அவைகளை ஏற்படுத்திய போது, ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு, அந்த பாவம் செய்யப்படும் போது, அதற்கான தண்டனை மரணம்.'' 8. "இந்த பாவத்தை செய்த எல்லா மனிதரும், அதை செய்ததற்காக மரண தண்டனை பெற்றனர். ஒரு நாள், ஒரு அடிமை இந்த தண்டனைக்கு ஏற்புடயவனானான். அவன் மரிக்க வேண்டியிருந்தது. அவன் ராஜாவுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டான். ராஜா கூறினான், நான் ஒரு நீதியான மனிதன். நான் என் வார்த்தையை காத்துக்கொள்வேன், நீ செய்துவிட்டாய், இங்கே என்னுடைய இராஜ்ஜியத்தில்... என்னுடைய சட்டத்தின்படி நான் வார்த்தையை காத்துக் கொள்ளும் நீதியான மனிதனாயிருப்பதால், அந்த பாவத்திற்கு எந்தவிதமான பாவ நிவர்த்தியுமில்லை என்று என் வார்த்தை கூறுகிறது. நீ மரிக்க வேண்டும். என்னால் முடிந்த ஒன்றே ஒன்று உன்னுடைய ஜீவனை எடுத்துக் கொள்வது மட்டும் தான்" “அந்த ஏழை மனிதன் கூறினான்.. அவன் நடுங்கிக்கொண்டே கூறினான், 'இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்” என்றான். அவன் ''நிமிர்ந்து நில்' என்றான். 'உன்னுடைய ஜீவனை நான் எடுக்கும் முன்பு உனக்கு என்ன செய்யவேண்டும்-?'' என்றான். "அவன் கூறினான், மரண தண்டனையின் கீழ் இருந்த அந்த அடிமை கூறினான்,"எனக்கு ஒரு கலசம் தண்ணீர் வேண்டும்" என்றான். உடனே ராஜா, "அவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுங்கள்" என்றான். அவன் அதை வாங்கிய போது, அவனுடைய தலை வெட்டப்பட இருப்பதால், அவன் நடுங்கிக் கொண்டே இருந்தான். அவனால் தண்ணீர் கலசத்தை பிடிக்க முடியவில்லை. அப்பொழுது ராஜா, 'ஒரு நிமிடம் பொறு, நிமிர்ந்து நில், நீ அந்த தண்ணீரை குடிக்கும் வரை உன் ஜீவனை நான் எடுக்க மாட்டேன்' என்றான். எனவே அவன் அந்த தண்ணீரை தரையில் ஊற்றி விட்டான். இப்பொழுது அந்த ராஜா என்ன செய்யப் போகிறான்-? இப்பொழுது, அவன் ஒரு நீதியான மனிதன். அவன் தன்னுடைய வார்த்தையை காத்துக் கொள்ள வேண்டும். அவனுடைய பாவ நிவர்த்தி கூறியது அதாவது - அதாவது அங்கே... அல்லது நான் என்ன கூறுகிறேன் என்றால், அவனுடைய வார்த்தை தண்டனை ஏதுமில்லை என்று கூறுகிறது.... அல்லது இந்த பாவத்திற்கு மீட்பு என்று எதுவுமில்லை என்று கூறுகிறது. இன்னுமாக அந்த ராஜா பேசி கூறினான், அதாவது அவன் அந்த தண்ணீரை குடிக்கும் வரை அவனைக் கொல்ல மாட்டேன் என்று. அது சாத்தியமே இல்லை; அவன் அதை தரையிலே ஊற்றி விட்டான்." நான் என்ன என்றேன்... அவன் கூறினான் "அது அந்த ராஜாவின் கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு" என்றான். நான் கூறினேன், "அது உண்மை. தேவன், கவனக் குறைவினால் தவறு செய்தார் என்று நீ நினைக்கிறாயா-?" என்றேன். நான் "அவர் அதை தம்முடைய வார்த்தைக்குள் வைக்கும் போது, அதை பாவ நிவர்த்திக்குள் வைக்காமல் விட்டு விட்டாரா," என்றேன். நான், "ஒ, சகோதரனே, பட்டினியால் மரித்த கோழியின் நிழலால் செய்யப்பட்ட சூப்பை விட அது மிக லேசானது" என்றேன். நான், "அது எப்பொழுதுமே வேலை செய்யாது. இல்லை, ஐயா தேவன் அதை தம்முடைய வார்த்தைக்குள் வைத்திருக்கிறார், அது விசுவாசிப்பவர்களுக்கு மட்டும், விசுவாசிகளுக்கு மட்டும் தான்" என்றேன். 9. "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்". நம்மிடம் போதுமான விசுவாசம் இல்லாது இருக்கலாம்... இதை ஆரம்பத்திலேயே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எந்த மனிதன் உங்களுக்காக ஜெபிக்கிறானோ, அதிகமாக அவனைப் பொறுத்தே சுகமளித்தல் இருக்கிறது; அது சரி, ஆனால் முழுவதுமே அல்ல. அது உங்களுடைய விசுவாசத்தை பொறுத்தும் இருக்கிறது. உங்களிடம் விசுவாசம் இருக்க வேண்டும். நாம் பேசப் போகிற இந்த சிறிய வார்த்தைகளை கவனியுங்கள். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்". இப்பொழுது, விசுவாசத்தை அறிவில் கொண்டிருப்பதற்கும் இருதயத்தில் கொண்டு இருப்பதற்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. தலையிலிருப்பதை விட முற்றிலும் வேறுபட்ட மனம் சார்ந்த இயல்புகளை இருதயம் கொண்டிருக்கிறது. 10. அவர்கள்... இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை அறிவியலுக்கு அது தெரியவில்லை. அது உங்களுக்கு தெரியுமா-? வேதாகமம் கூறினது, அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ..." என்று... அறிவியல் "அது எவ்வளவு தவறு" என்று கூறினது. "மனதானது இருப்பதற்கு எந்த வசதிகளும் உங்கள் இருதயத்தில் இல்லை. உங்கள் மனது உங்கள் தலையில் தான் இருக்கிறது. உங்களுடைய இருதயத்தில் உங்களால் சிந்திக்க முடியாது. உங்கள் தலையில் தான் நீங்கள் சிந்திக்க முடியும்" என்றது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சிக்காகோ தெருவில் நின்றிருந்த போது, அவர்கள் செய்தித்தாளில் அதை பற்றி பெரிய எழுத்துகளில் அப்படியாக வைத்திருந்தனர். அவைகளில் ஒன்றை நான் வாங்கினேன், அறிவியலானது மனித இருதயத்தில் (மிருக இருதயத்தில் அல்ல) கண்டு பிடித்திருக்கிறது, மனித இருதயத்தில் ஒரு சிறிய அறை இருக்கிறது, அங்கே இரத்த அணு கூட இல்லை. அங்கே தான் ஆத்துமாவின் இருப்பிடம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆத்துமா இருதயத்தில் தான் இளைப்பாறுகிறது. ஓ. என்னே. பாருங்கள், தேவன் எப்பொழுதுமே சரியானவர். உங்களுக்கு தெரியுமா, இறுதியில் அவர்கள் வழிக்கு வந்து விட்டனர், அவர்கள்--அவர்கள் எப்பொழுதாவது ஒரு முறை அதை காண்கிறார்கள். ஆகவே தேவன் சூரியன் நகர்கிறது என்று கூறினால், அறிவியல் அது ஒரே இடத்தில் தான் இருக்கிறது என்றது... என்னுடைய பள்ளிக்கூடத்தில் அப்படித்தான் எனக்கு கற்பித்தனர். இப்பொழுது, கலிபோர்னியாவில், அந்த பெரிய வானிலை ஆய்வு கூடங்களில், இப்பொழுது அவைகளை அவர்கள் தவறு என்று கூறுகிறார்கள். அதை அறிவியல் ரீதியில் தவறு என்று நிருபித்துள்ளனர். என்கின்றனர். சூரியனும் நகர்கிறது என்கின்றனர். புரிந்து கொண்டீர்களா. 11. அறிவியல் ஒன்றைக் கூறும், பின்பு அதை பின்வாங்கிக் கொள்ளும், காரியங்களை கூறும் மறுபடியும் பின்வாங்கிக் கொள்ளும், ஆனால், சகோதரனே, இங்கே நீங்கள் படிக்ககூடிய ஒரு புத்தகம் இருக்கிறது. அது ஒரு போதுமே பின்வாங்காது, தேவனுடைய நித்திய வார்த்தை. உங்களுடைய ஆத்துமாவை அதின் மேல் நீங்கள் இளைப்பாற பண்ணலாம். உங்களால் அதை விளக்க முடிகிறதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டே அல்ல. எப்படியாயினும் அதை நான் விசுவாசிக்கிறேன். அது சரி. தேவன் அதை கூறியிருக்கிறார், அது அதை தீர்த்து வைக்கிறது. உங்களுடைய விசுவாசத்தில் நீங்கள் அந்த அளவுக்கு எளிமையாக இருங்கள், அப்பொழுது தேவன் உங்களுக்காக கிரியை செய்வார். ஆம் ஐயா. அவர் தம்முடைய வார்த்தைக்கு கடமைப்பட்டிருக்கிறார். அவர், "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" என்று கூறியுள்ளார், எல்லாமே, 'நீங்கள் எவைகளை வாஞ்சிக்கிறீகளோ, அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள். அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அவைகளை விசுவாசித்தால் மட்டும் போதும், அவைகள் உங்களுக்கு அளிக்கப்படும்.” அது தான் தேவனுடைய தேவையாய் இருக்கிறது. விசுவாசம் தான் தேவனை அசைக்கும். 12. இப்பொழுது, இங்கே இது வருத்தத்திற்குரியது. ஒரு ஆம், ஒரு கவனிக்க வேண்டிய சம்பவம் இது. நாம் இதைப் பார்த்து இதைப் பற்றின சில கருத்துக்களை சிறிது நேரம் அளிக்க போகிறோம். ஒரு நூதனமான சம்பவம். ஒரு-ஒரு சில நாளுக்கு முன்பு தான், இயேசு இந்த அதே மனிதர்களை ஒன்றாக அழைத்து, எல்லாவிதமான வியாதிகளை குணப்படுத்தவும், எல்லா விதமான பொல்லாத ஆவிகளை துரத்தவும் குஷ்டரோகிகளை சுகப்படுத்தவும், மரித்தோரை உயிர்பிக்கவும் வல்லமையை அவர்களுக்கு அளித்திருந்தார். அவர் அவர்களை அனுப்பி இருந்தார். அவர்கள் வெளியே சென்று அதை செய்து. சந்தோஷத்தோடே திரும்பினர். ஆனால் இயேசு சிறு பயணமாய் மலைக்கு மேலே, மலை உச்சிக்கு சென்றிருந்த போது, கீழே பள்ளத்தாக்கிலே இந்த சீஷர்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல், முழுவதுமாக ஒரு வலிப்பு நோய் பிரச்சனையால் தோற்கடிக்கப்பட்டு இருந்தனர். அவர்களால் அந்த பொல்லாத ஆவியை சமாளிக்க முடியவில்லை. இப்பொழுது, யாரோ ஒருவர் சிறிது நாட்களுக்கு முன்பு கூறினார், "அந்த சீஷர்களுக்கு இருந்தது போன்று வியாதிகளை குணப்படுத்தும் வல்லமை உங்களுக்கிருந்திருந்தால்..."என்று இப்பொழுது, ஆதியில் அவர்களுக்கு இருந்தது போன்றே பரிசுத்த ஆவியை நீங்களும் பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதை இந்த ஜனங்கள் விசுவாசிப்பதில்லை. ஆனால் அவர்கள் வேதாகமத்தையும் அறியவில்லை, பரிசுத்த ஆவியையும் அறியவில்லை. தேவனுடைய வாக்குதத்தம் அப்படித் தான் கூறியிருக்கிறது. மிக அதிகமான வேதப்பாடத்தை ஜனங்கள் தங்கள் தலைகளில் புகுத்திக் கொள்ளாமலிருந்தால், அப்பொழுது அவர்கள் வெறுமனே தேவனை விசுவாசித்து அதை பெற்றுக் கொள்ளலாம். அவ்வளவு தான். 13. வாக்குவாதம் செய்த ஒரு மனிதனை போன்று. அவன் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தான். அவன், "தேவன் என்கிற காரியம் எதுவுமில்லை. தேவன் என்கிற காரியம் எதுவுமில்லை” என்று கூறிக்கொண்டிருந்தான். அவன் அப்படி பேசிக்கொண்டிருந்த போது, அங்கே அமர்ந்திருந்த ஒரு சிறிய விளையாட்டு பையன். அவன் தலைமுடி அவன் கண்கள் வரை தொங்கி கொண்டிருந்தது. அவன் ஒரு முழு மேல் சட்டையை அணிந்திருந்தான், அவன் நடந்து வந்தான், அந்த பையனுக்கு ஒரு பல் முன்னாக நீட்டியிருந்தது, அந்த நாத்திகனுக்கு முன்பாக நின்றான், அவன் கூறினான்... ஒரு ஆப்பிளை தோலுரிக்க ஆரம்பித்தான், நாத்திகன் “உனக்கு என்ன வேண்டும்-?" என்றான். "உன்னிடம் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான். அவன், "நல்லது, கேள்வியை கேள்” என்றான். "நல்லது, ஒரு நிமிடம் பொறு" என்று ஆப்பிளை உரித்துக் கொண்டே இருந்தான், அதினுடைய நடுபாகத்தை வெட்டி வெளியே எடுத்தான். அவன், "நல்லது, கேள்வியை கேள். சீக்கிரமாக, நீ என்ன கேட்கபோகிறாய் என்று சொல், அல்லது நான் உன்னை வெளியே தூக்கி வீசி விடுவேன்" என்றான். 14, "நல்லது, ஒரு நிமிடம்." பையன் சாப்பிட்டான் - ஆப்பிளை உரித்து, அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து, வாயில் போட்டு அதை மெல்ல ஆரம்பித்து மென்று அதை விழுங்கினான். பின்பு கேள்வியை கேட்க விரும்புகிறேன். இந்த ஆப்பிள் இனிப்பானதா அல்லது புளிப்பானதா-?" என்றான். நாத்திகன் கூறினான், "நான் அதை சாப்பிடவில்லை. எனக்கு தெரியாது" என்றான். "அதைத் தான் நான் நினைத்தேன்" என்று கூறி, உடனே நடந்து சென்று அமர்ந்தான். நீ பரிசுத்த ஆவியை பெறும் வரை, பரிசுத்த ஆவி என்கிற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று உனக்கு எப்படி தெரியும்-? நீ சுகமளித்தலை பெறும் வரை, இயேசு சுகமளிக்கிறாரா இல்லையா என்று எப்படி உனக்கு தெரியும்-? "பரிசுத்த ஆவி இல்லாமல், இயேசுவை கிறிஸ்து என்று எந்த மனிதனாலும் கூற முடியாது" என்று கூறப்பட்டிருக்கிறது. நீ எவ்வளவு வேதாகமம் வாசிக்கிறாய் என்பதெல்லாம் பொருட்டே அல்ல, அதெல்லாம் வேலைக்கு ஆகாது. பரிசுத்த ஆவியானவர் அதை உனக்கு சாட்சி பகர வேண்டும் - உன்னுடைய ஜீவியத்தில் அவருடைய உயிர்த்தெழுதல் - இல்லையென்றால் அது இனிப்பா அல்லது புளிப்பா என்று உனக்கு தெரியாது. அது சரி. கவிஞன் இவ்விதமாக கூறுகிறான், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்" என்று, அதை ருசிப்பதற்கு முன்னரே யாருக்கு தெரியும்-? ருசி பார்ப்பவனே அதை அறிவான். பழைய பழமொழி என்னவென்றால்,"பணியாரத்தின் நிரூபனம் அதை உண்டு பார்ப்பதே” எனவே அப்படி செய்வது தான் நல்லது. ஆகவே இந்த நாத்திகன் இதில் தோற்றுப் போனான். 15. இப்பொழுது, இந்த சீஷர்கள் தங்களுடைய அவிசுவாசத்தினால் தோற்கடிக்கப்பட்டனர். இயேசு மலைக்கு மேல் சென்றிருந்தார் மேலும் உங்களுக்கு தெரியுமா-? அப்பொழுது அவர்கள் தோற்றது எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியளிக்கிறது, 'ஏனெனில் அது எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக்கி காட்டுகிறது. ஓ நாம் தருணங்களை பார்க்கிறோம்... ஓ. இங்கே, ஜோன்ஸ்காக ஜெபித்ததை நான் பார்த்திருக்கிறேன்; இவருக்காக ஜெபித்ததை நான் பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்கு உதவி செய்யவில்லை. நிச்சயமாக. இந்த பிள்ளைக்கும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. அந்த பிள்ளையை சுகப்படுத்தும் வல்லமையுடைய சீஷர்களால் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து (ஒலி நாடாவில் காலியிடம் – ஆசி) ஊழியக்காரர்கள், அவர்கள் அதை செய்யும்படி வல்லமை அளித்திருந்தார். ஆனாலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். நிச்சயமாக. அதைப் பற்றி ஒன்றுமே செய்ய முடியவில்லை. இயேசு மலைக்கு மேல் இருந்தார், அந்தக் காட்சியில், பூமிக்குரிய நாடகத்தின் முதல் தோல்வி வந்தது. இங்கே பள்ளத்தாக்கில் எல்லா பாஸ்டர்களும், அவர்களை கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர். "அ.அ.அ. இதை செய்வதற்கான வல்லமையை அவர் உங்களுக்கு அளித்தார் என்று நான் நினைத்தேனே. நீ அதை செய் நாங்கள் பார்க்கிறோம். இப்பொழுது, அவர் வெளியே இருக்கிறார்.” 16. அந்த சீஷர்கள் ஜெபித்து பிசாசை துரத்திக் கொண்டிருந்தனர் அல்லது முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். அந்த பையன் அப்பொழுது வலிப்பினால் இழுத்துக் கொண்டே இருந்தான். கூறினார்கள், "நான்...? "என்னே ஒரு காரியம் இது, இது ஏதோ ஒரு விதமான வித்தை. சுகமளித்தலின் நாட்கள் கடந்து விட்டது" என்றனர். இங்கே நின்றிருந்த, அந்த மனிதன், ஒருவேளை இந்த பையனுடைய அப்பா, தன்னுடைய பாஸ்டரிடம் சென்று, "பாஸ்டர், இந்த சீஷர்களை குறித்து அல்லது நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்று அழைக்கப்படும் இந்த மனிதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், பிசாசுகளை அவர் துரத்துகிறார் என்று சொல்லுகிறார்களே" என்றான். "ஆ.... ஆ, அது ஒரு மனோவசியம். அதில் வேறொன்றுமே இல்லை”. ஏனெனில் உங்களுக்கு தெரியுமா, பரிசேயன் ஜோன்ஸ்க்கு அதை பற்றி எல்லாமே தெரியும். "உன்னிடம் நான் கூறுகிறேன், இன்னும் கொஞ்ச நாட்களில் ஒருங்கிணைப்பு கூட்டம் வருகிறது. நீ உன் மகனை அங்கே அழைத்து வந்தால், இந்த சீஷர்கள் இங்கே இருப்பார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே நாம் பையனை அங்கே அழைத்து சென்று அவர்கள் அவனை... அவனைச் சுகமாக்கும்படி அவர்களுக்கு சவால் விடலாம். ஆம் ஐயா இப்பொழுது அது அந்த பிசாசே அவ்விதமாகத் தான் அவன் கிரியை செய்கிறான் எனக்கு முன்பாக இதை செய்... நான் அதை பார்க்கட்டும் என்பான்" 17. சில நாட்களுக்கு முன்பு வானொலியில் முதன்முறையாக ஒரு மனிதன் என்னிடம் சவால் விட்டான் அது என்னவென்றால், தெய்வீக சுகமளித்தலால் நாங்கள் சுகமாக்கப்பட்டோம். என்று யாரேனும் நிரூபித்தால் அவர்களுக்கு அவன் ஆயிரம் டாலர்களை அளிப்பதாக கூறி இருந்தான். நான் என்னுடன் இரண்டு மருத்துவர்களையும் நான்கு நபர்களையும் அழைத்து சென்றேன். அவனுடைய படிக்கட்டிற்கு நடந்து சென்று "நல்லது, அதை தாங்கள் டெக்ஸாசில் கேள்விப்பட்டோம்" என்றேன். அவன்... கூறினான். "என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றால் ஒரு கத்தியை எடுத்து ஒரு சிறு பிள்ளையின் கையை வெட்டுவோம். நீ அதை எங்கள் சகோதரர்களுக்கு முன் பிடிக்க வேண்டும். பின்பு நீ அதை சுகப்படுத்துவதை நாங்கள் பார்க்க வேண்டும். அப்பொழுது உன்னை நாங்கள் விசுவாசிப்போம்" என்றான். நான் கூறினேன், "உனக்கு தான் தலையில் சுகமளித்தல் தேவையாயிருக்கிறது" என்றேன். நான் கூறினேன், "உன்னிடம் ஏதோ கோளாறுள்ளது. நீ மனதளவில் சரியான மனிதனாயில்லை என்றேன்", நிச்சயமாக, எந்த மனிதனாவது ஒரு குழந்தையின் கையை வெட்டி அங்கே பிடித்து, அவனுக்கு முன்பாக சுகப்படுத்த வேண்டும் என்று விரும்புவானா. ஏன், நிச்சயமாக, நாங்கள்... ஒருவனுக்கும் அறிவே இல்லை... அது அறிவுசார்ந்த பதிலை விடவும் அப்பாற்பட்டது. அது சரி, நிச்சயமாக... அது உண்மை. நான் கூறினேன், "இங்கே நிற்கும் இந்த பெண்ணைப் பற்றி என்ன இங்கே நிற்கும் இவளுடைய மருத்துவர் இவளுக்கு புற்று நோயிருக்கிறது என்று கூறியிருந்தார், ஆனால் இப்பொழுது அவள் வாக்குமூலம் இதோ மருத்துவரின் நலமாயிருக்கிறாள்-? இருக்கிறது. என்னுடைய சுவிசேஷ பயணத்திற்கு எனக்கு ஆயிரம் டாலர் வேண்டுமென்றேன்". அவன் எனக்கு அதை கொடுக்க மாட்டான். நிச்சயமாக நிச்சயமாக கொடுக்கமாட்டான். ஒ. அது சகோதரன் மூர் வழக்கமாக கூறுவதை போன்று, 'அயர்லாந்து மனிதனின் ஆந்தையைப் போல, எல்லா வீண் பேச்சுகளும் இறகுகளும் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் ஆந்தையை காணவில்லை" என்று. அந்த காரியங்களிலும் அந்த விதமாகத் தான் அது இருக்கிறது. 18. இப்பொழுது, வெளியே வந்து "உனக்கு விசுவாசமில்லை என்று கூறுவதற்கு பதிலாக, சுலபமாக எதோ ஒரு சபையின் போதனைக்கு பின்னாக ஒளிந்துக் கொள்ள முயற்சி செய்வது. அவ்வளவு தான். சாத்தான் ஒரு போதும் பரிசுத்தாவியை பெறவில்லை: ஆனபடியால் உங்களுக்கு விசுவாசத்தை கொடுக்க அவனிடம் ஒன்றுமே இல்லை. தேவனிடம் தான் விசுவாசம் இருக்கிறது. நீங்கள் தேவனால் நிரப்பப்பட்டிருப்பது போல, நீங்கள் விசுவாசத்தால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரனாயிருந்தால், நீங்கள் தேவனை போன்றவர்கள். அவர் வார்த்தையை மட்டும் தான் உரைக்கிறார், அது தன்னையே சிருஷ்டித்துக் கொள்கிறது. அவருடைய வார்த்தை தான் சிருஷ்டிக்கும் வல்லமைக் கொண்டது. இந்த உலகம் எப்படி இங்கே வந்திருக்கும்-? அவர் இல்லாதவைகளை கொண்டு அதை சிருஷ்டித்தார். அவர் "உண்டாகக்கடவது" என்றார். இதோ அது இங்கே இருக்கிறது. அவர் தன்னுடைய சொந்த வார்த்தையை விசுவாசித்தார். 19. இன்றிரவு நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த தூசி, அது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சிருஷ்டிக்கும் வல்லமையே, சிருஷ்டிக்கும் வார்த்தையே. பிரத்தியட்சியமான தேவனுடைய வார்த்தை தான் அந்த தூசி. "ஆமென்" என்று கூறுங்கள். [சபையார் "ஆமென்" என்கின்றனர்-ஆசி]..-?ஆம், ஐயா, இன்றிரவு நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த தூசி, அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. ஆமென். அங்கேயிருக்கும் அந்த கம்பம் பிரத்தியட்சியமான தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை பிரத்தியட்சமானதால் தான் இன்றிரவு நான் இங்கே இருக்கிறேன். ஆமென். ஓ, என்னே, அது பிசாசை வெட்கப்படவைக்கவில்லையா. நிச்சயமாக அது வெட்கப்பட வைக்கிறது. அது உண்மை; இது வார்த்தையாயிருக்கிறது. இப்பொழுது, அவர்கள் அங்கே இருந்தார்கள். அவன் கூறினான். "இப்பொழுது...-?... அங்கே வா, நீ உன் பிள்ளையை அங்கே அழைத்து வா, இந்த சீஷர்களுக்கு எவ்வளவு வல்லமையிருக்கிறது என்பதை பார்த்துவிடலாம்" என்றான். நல்லது, அவர்கள் ஆர்வமாயினர், உங்களுக்கு தெரியுமா, இங்கே அவர்கள் நின்றிருந்தார்கள், அந்த கூட்டத்தார் தங்களுடைய கைகளை பின்னாக கட்டிக்கொண்டு அங்கே சுற்றி நின்றனர் "உ, உ. அவ்வளவு தான். அந்த பையன் கொஞ்சம் கூட சரியாகவில்லை. கொஞ்சம் கூட, கொஞ்சம் கூட சரியாகவே இல்லை" என்றனர். 20. அது போன்ற நிகழ்வில் உங்களால் என்ன செய்ய முடியும்-? ஆம். அவ்வாறு தான் இருந்தது. எனவே சீஷர்கள் அவனை வெளியே துரத்த முயற்சித்தனர். ஓ. இப்பொழுது அவர்களிடம் வல்லமை இருந்தது, அவர்கள் அதை பெற்றுக் கொண்டனர் என்று இயேசு கூறியிருந்தார். அதை செய்வதற்கென்று கிறிஸ்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் வல்லமை அளித்திருந்தார். அவர்கள் அதை முன்னே செய்திருந்தனர். ஆனால் கூறினான், "நீ அதை இப்பொழுது செய், நான் பார்க்கிறேன் என்றான். நீ அதை செய் நான் பார்க்கட்டும் என்றான்". இப்பொழுது, உங்கள் மனதில் இதை நான் என்றென்றைக்குமாக பதித்துவைக்கட்டும். யாரேனும் அதுபோன்று கூறுவதை நீங்கள் கேட்டால், அந்த மனிதனுக்குள்ளாக இருந்து பிசாசு தான் பேசுகிறான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அதை உங்களுக்கு நான் வார்த்தையில் காண்பிக்கிறேன். முதன் முறையாக பிசாசு இயேசுவை சந்தித்த போது, அவன் அவரை சந்தேகித் தான். சந்தேகம் அது எப்போதுமே பிசாசுடையதாயிருக்கிறது. அங்கே தான் முதல் பாவமே வந்தது. சந்தேகத்தை தவிர பாவம் என்று வேறெதுவுமே இல்லை. அவிசுவாசம் தான் மூலப்பாவம், அவிசுவாசம் மட்டும் தான் பாவம். விபச்சாரம் செய்வது பாவமல்ல; சிகிரேட் புகைப்பது பாவமல்ல; குடிப்பது பாவமல்ல. அவையாவும் அவிசுவாசத்தின் தன்மைகள். ஆமென். 21. நீங்கள் அதை பற்றி பேசுகிறீர்கள்... ஜனங்கள், "சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அவரை.... கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்" என்று கூறுகிறீர்களா என்கின்றனர். அதை தான் தேவன் கூறுகிறார். அதை பற்றின பிரச்சனை என்னவென்றால், நான் ஏதோவொன்றை கூறி. உங்களை விசுவாசிக்க வைப்பது போல் செய்யலாம். ஆனால் நீங்கள் உண்மையாக விசுவாசிக்கும் போது அது முழுவதையும் தீர்த்து வைக்கிறது. அது சரி. விசுவாசம்... காரணம், ஏவாள் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தாள். கவனியுங்கள். ஏதேன் தோட்டத்தில் முதல் மூலப் பாவத்திற்கான சாத்தான் இயேசுவை சந்தித்த போது..-?... ஏவாளுடைய சந்ததியை, ஸ்திரீயின் வித்தை, சாத்தான் ஏவாளிடம் பயன்படுத்திய அதே சூழ்ச்சியை பயன்படுத்தினான். முதல் காரியம் பசியுண்டாயிற்று, அடுத்த காரியம் அவன் "நீர் தேவனுடைய குமாரனேயானால், எனக்கு முன்பாக ஒரு அற்புதத்தை செய், நீர் ஏதோவொன்ற... ஒரு அற்புதத்தை செய்யும் நான் பார்க்கிறேன்" என்றான். இப்பொழுது, ஒரு நபர் அதை கூறுவாரானால், அந்த நபருக்குள்ளாக இருந்து யார் பேசுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது பிசாசு தான். அது சரி. அவன், "இப்பொழுது நீ எனக்கு முன்பாக ஒரு அற்புதத்தை செய், நான் பார்க்கிறேன். இந்த கல்லுகளை அப்பங்களாக்கி பசியாற சாப்பிடு நான் பார்க்கிறேன், அப்பொழுது நீ தான் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிப்பேன்" என்றான். 22. இயேசு பிதாவுடைய வார்த்தையுடன் சரியாக திரும்பினார். அவரால் வேறெதையும் கூட செய்திருக்க முடியும். ஆனால் ஒரு பெலவீனமான விசுவாசியின் மீதும் தேவனுடைய ஆசிர்வாதத்தை கொண்டு வருவதற்காக, நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்... உங்களிடம் வரங்கள் இருக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை. தேவனுடய வார்த்தையை மட்டும் விசுவாசித்தால் போதும். இயேசு தன்னுடைய வரங்களையோ, தன்னுடைய வல்லமையையோ பயன்படுத்தவே இல்லை. அவர் பிதாவினுடைய வார்த்தையை பயன்படுத்தினார். அவர் திரும்பி நின்று 'மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்றார். அவர் ஒரு தரிசனம் சொல்லுகிறவராய் இருந்த போது, அவர் தரிசனங்களைக் கண்டார் என்பதை நாம் அறிவோம். ஜனங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை அவரால் கூற முடியும். அவர்களுடைய இருதயத்திலிருக்கும் இரகசியங்களை அவரால் சொல்ல முடியும், அது போன்று மற்றவைகளையும் செய்ய முடியும். அவர் "இந்த அடையாளங்கள் உலகின் முடிவு பரியந்தம் பின்தொடரும்" என்றார். 23. ஒரு நாள் அவருடைய முகத்தில் கந்தை துணியை சுற்றி -- சில இராணுவ வீரர்கள் -- ஒரு தடியை கொண்டு அவருடைய தலையிலே அடித்து. 'இப்பொழுது, தரிசனம் கூறு"என்றனர். (பிசாசு தான் அவரை அடித்தான்). 'நீ தரிசனம் கூறு. உன்னை அடித்தது யார் என்பதை கூறு. அப்பொழுது நாங்கள் உன்னை விசுவாசிப்போம். உன்னை அடித்தது யார் என்று கூறு. உன்னுடைய கண்களை கந்தை துணியினால் சுற்றியிருக்கிறோம்" என்றனர். இயேசு தம்முடைய வாயை திறக்கவேயில்லை. ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. சிலுவையிடம் அந்த யூதர்கள்... அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்திருந்த போது, "இப்பொழுது, நீர் தேவனுடைய குமாரனேயானால், எங்களுக்கு முன்பாக ஒரு அற்புதத்தை செய்து காட்டு. உன்னுடைய கைகளை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கி வா, அப்பொழுது நீ தான் கிறிஸ்து என்பதை, தேவனுடைய குமாரன் என்பதை நாங்கள் விசுவாசிப்போம்" என்றனர். இயேசு பிசாசுக்கு செவிக்கொடுப்பதில்லை. ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பாருங்கள்-? ஆகவே "நான் பார்க்கும்படி நீ ஒரு அற்புதத்தை செய்" என்று யாரேனும் கூறுவதை நீங்கள் பார்த்தால், நினைவில் கொள்ளுங்கள், அது பிசாசென்று. அவர் தம்முடைய சொந்த தேசத்திற்கு வந்திருந்த போது, அவர்கள் "இப்பொழுது, நீ அந்த தேசங்களில் சுகமளிக்கிறாய் என்பதை நாங்கள் கேள்விப்பட்டோம். அங்கு நடந்த சுகமளித்தலை குறித்து கேள்விப்பட்டோம். நாங்கள் பார்க்கும்படி எங்கள் மத்தியிலும் ஏதோ ஓன்றை செய்; நாங்கள் காணட்டும்" என்றனர். 24. இயேசு அவர்களுடைய அவிசுவாசத்தை குறித்து ஆச்சரியப்பட்டு, பல மகத்தான கிரியைகளை அவரால் செய்ய முடியவில்லை. அது உங்களுடைய விசுவாசத்தையும் பொருத்தது ஏன்-? அவரிடம் வல்லமை குறைவா-? தேவனுடைய சித்தமில்லையா-? அது விசுவாசத்தின் குறைவு, அவிசுவாசம், உங்களுடைய அவிசுவாசத்தினால், அவரால் செய்ய முடியவில்லை. இந்த சீஷர்கள் தோற்றவர்களாய், தங்கள் தோல்வியின் மத்தியில் இருந்தார்கள். இது வரை பூமியில் நடந்ததிலேயே மிகவும் அன்பான நபர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரன். ஒரு வேளை அவர் இன்னும் பெலவீனமாயிருந்திருக்க கூடும். அந்த மகத்தான அபிஷேகத்தின் கீழிருந்து வந்ததால், அவர் அந்த தரிசனத்துக்குள் எடுக்கப்பட்டு, பின் நடப்பவைகளை முன்னரே பார்த்தார்.. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் கர்த்தருடைய வருகையை முன் கூட்டியே பார்த்தனர், வருகையின் ஒழுங்கை எப்படியாக எலியாவும் மோசேயும் முதலாவதாக வருவார்கள், பின்பு இயேசு வருவார் என்பதை பார்த்தனர். அவர்கள் அவரை பார்த்தனர், அப்பொழுது தான் முதலாம் வருகை, எலியாவும் மோசேயும்; பின்பு திரும்பிய போது இயேசுவை மட்டும் பார்த்தனர், அவர் வரும் போது, மேலும் மேலும் ஆயிர வருட அரசாட்சிக்கு பிறகு. 25. கவனியுங்கள், இதில் உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம், இங்கே இருந்தவர்களில் சிலர், பரிசேயன் ஜோன்சும் மற்றவர்களும், 'நல்லது, இதோ பார், இங்கே அந்த மனிதன் வருகிறான். அவர்கள் அனைவருக்கும் அவன் தான் தலை. இங்கே நடக்கும் எல்லா காரியங்களையும் ஆரம்பித்தவன் அவன் தான்" என்றனர். எனவே நாம் சென்று அவன் என்ன கூறப்போகிறான் என்பதை பார்ப்போம் என்றனர்”. கர்த்தர் வருவதை சீஷர்கள் கண்டபோது, அவரால் அதை செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே அவர்கள் அவரிடம் ஓடினர். அங்கே அவர்கள் அனைவரும் அவர் இருந்த இடத்தை சூழ்ந்தபோது, இயேசு என்ன கூறினார்-? காலர் பட்டைகளை தூக்கியவாறு நின்றிருந்த அந்த ஒரு கூட்ட பரிசேயரிடம் அவர் நடந்து சென்றார். [ஒலி நாடாவில் காலியிடம்]...-?... ஓ, பரிதாபத்திற்குரிய எழுப்புதல் இல்லா பிரசங்கிகளே, நியாயதீர்ப்பு நாளில் அவர் உங்களிடம் என்ன கேள்வி கேட்க போகிறார்-? நீங்கள் இதே போன்று அவர் முன் நிற்க போகிறீர்கள். "எனவே அவரிடம் எதை பற்றி கேள்வி கேட்கிறீர்கள்-? எதற்காக இதைக் குறித்ததான தேவையில்லா பேச்சுக்கள்-? என்னுடைய பிள்ளைகளிடம், நீங்கள் என்ன கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்-?" ஓ, என்னே, அவர் அவர்களை சுற்றி பார்ப்பதை என்னால் காண முடிகிறது. அப்பொழுது ஒருவன் பேசினான், அவன், “ஐயா” என்றான். அவனுக்கு அவர் ஒரு சாதாரண மனிதனாக காணப்பட்டார். அவன், "ஐயா, என் மகனை உங்கள் சீஷர்களிடத்தில் நான் அழைத்து வந்தேன். அவனுக்குள் ஒரு தீய ஆவி இருக்கிறது, அவன் ஒரு ஊமை, அவனுக்கு வாயில் நுரை தள்ளும், அவன் தீயிலும் தண்ணீரிலும் விழுவான். அவனை சுகமாக்கும்படி உம்முடைய சீஷர்களிடத்தில் அழைத்து வந்தேன், ஆனால் அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றான். 26. என்னால் அந்த பாஸ்டர், பரிசேயன் ஜோன்ஸை காண முடிகிறது. 'ஆம், இதை ஒன்றுமே செய்ய முடியவில்லை, எனவே அவனை உம்மிடம் நான் அழைத்துவர போகிறேன். சீஷர்களால் அதை துரத்த முடியவில்லை. எனவே அவனை உன்னிடம் நான் கொண்டு வருகிறேன். அதைக் குறித்து உன்னால் ஏதும் செய்ய முடிந்தால் --- அதைக் குறித்து உன்னால் ஏதும் செய்ய முடிந்தால்- முடிந்தால்..."என்றான். உங்களுக்கு புரிகிறதா-? 'முடிந்தால்" ஓ. என்னே. “உன்னால் முடிந்தால், இப்பொழுது ஏதாவதொன்றை இதற்கு செய்". இயேசு நின்றபடியே, சுற்றிப் பார்த்து, "அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றார். அவர்கள் பிள்ளையை அங்கே அழைத்து வந்த போது, பிசாசு தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள ஆரம்பித்தான். பிசாசு எப்பொழுதுமே அப்படித்தான் பெரிய ஆளாக செய்கிறான். அவன் எப்பொழுதுமே தன்னை ஒரு காட்டிக் கொள்ள விரும்புகிறான். ஆம். பிசாசு அந்த பையனை இதுவரை இருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகபட்சமான வலிப்பு இழுப்புக்கு உள்ளாக்கினான். அவன் இயேசுவை பயமுறுத்த முயற்சித்து, சரியாக அந்த இடத்திலேயே விழுந்தான். அவன் தரையில் விழுந்து, நுரை தள்ள ஆரம்பித்த போது, அல்லது சீஷர்களுக்கு முன்பாக அவன் நுரை தள்ளின போது போது, சீஷர்கள் கொஞ்சம் பயந்து விட்டனர். ஆனால் அவரை உன்னால் பயமுறுத்த முடியாது, சகோதரனே. பிசாசு அந்த பையனை மிகவும் துடிதுடிக்க செய்து விட்டான். அவன் கீழே விழுந்து, கைகால்களை பின்னி, நுரை தள்ளி, தரையிலே சுழல ஆரம்பித்தான், சற்றே....-?... ஏனெனில் அவன் தன் முடிவு சமீபமாய் இருக்கிறதை அறிந்தான். இயேசு பிள்ளையை பார்த்தார். அவர் அந்த தகப்பனிடம், "எவ்வளவு நாளாக இவனுக்கு இப்படி இருக்கிறது-?" என்று கேட்டார். 27. அவன், "சிறு வயது முதலே, ஓ", "அவன் தீயிலும் மற்றவற்றிலும் விழுவான்" என்று அவன் கூறினான். மேலும் அவர் கவனத்தை ஈர்த்த போது... இப்பொழுது, இங்கே நாம் ஒரு நாடகத்தை சித்தரிப்போம். ஓ, என்னே. இது தான் பள்ளத்தாக்கு; அது தான் மலை. சரியாக அந்த மலையில் தான், தேவன் கீழே இறங்கி வந்து, அவரை நிழலிட்டு, "இது என் நேசகுமாரன். இவருக்கு செவி கொடுங்கள்" என்று கூறினார். இப்பொழுது அவர் அங்கே நின்றுக் கொண்டிருகிறார்; அந்த மலையில்... பிதா அவரோடு இருந்தார். புறாவானது ஆட்டின் மீது இருந்தது; அந்த புறா இன்னமுமாக அந்த ஆட்டின் மீதே இருக்கிறது, அதை அவரும் அறிவார். அவர் என்ன செய்ய முயற்சித்தார்-? அவர் அதை கூறுவதற்கு முன்பாக இதினூடாக சென்றிருப்பார்: "மெய்யாகவே. மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பிதாவால் செய்ய முடியும் - பிதா செய்ய குமாரன் காண்கிறதை தவிர அவரால் வேறொன்றையும் செய்ய முடியாது" அது சரி தானே-? பரிசுத்த யோவான் 5:19-ல், 'நான் தரிசனம் காண்கிறேன், நான் என்ன செய்ய வேண்டுமென்று தரிசனத்தில் பிதா காண்பிக்கிறாரோ அதை மட்டுமே நான் செய்கிறேன்". பரிசுத்த யோவான் 5:19. “நான் ஒன்றையும் செய்வதில்லை”. 28. சீஷர்கள் தோற்றுப் போனார்கள். அந்த தகப்பன் பகைமை உணர்வோடு நின்றிருந்தான். ஏன்-? "நல்லது இப்பொழுது, அவரும் அதை செய்ய மாட்டார் என்பதை நான் அறிவேன். ஏனெனில் அவர் அதை செய்யவில்லை என்றால்... இந்த சீஷர்களால் அதை செய்ய முடியவில்லை என்றால், அப்பொழுது அவராலும் அதை செய்ய முடியாது. இப்பொழுது, நானும் உங்களோடு கூட விசுவாசிக்கிறேன் பாஸ்டர், அதவாது இது ஒரு கூட்ட போலியான ஒரு கூட்ட கிளர்ச்சியாளர்கள் மட்டுமே, ஒரு கூட்ட மனம் சார்ந்த அல்லது மனதை படிக்கக்கூடிய அல்லது ஏதோவொரு கூட்டம் மட்டுமே அவர்கள் அவ்வளவு தான்” என்று அவன் தன் இருதயத்தில் சிந்திக்க ஆரம்பித்தான். அவிசுவாசம் எப்படி பிடித்து வைக்கிறது பாருங்கள்-? ஒ. அது எவ்வளவு முறை தோல்வி அடைகிறது என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை, அவர் தேவனாகவே இருக்கிறார், அவர் சுகமளிக்கிறவராகவே இருக்கிறார். இன்றிரவு நான் 500 பேருக்கு ஜெபித்து, அந்த ஐந்நூறு பேருமே காலையில் மரித்தாலும். இன்றிரவு அவர் சுகமளிக்கிறவராக இருந்தது போலவே நாளையும் சுகமளிக்கிறவராகவே அவர் இருக்கிறார். அதை பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை. தேவன் அதை கூறியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அதுவே எனக்கு போதுமானது. அவருடைய வார்த்தை அப்படிதான் கூறியிருக்கிறது, 29. எலியா வெளியே சென்ற போது பாருங்கள்...-? தீர்க்கதரிசி. புறா அவன் மீது இருந்தது. எனவே அவன்...-?... அவன் எல்லா பூசாரிகளையும் அழைத்து... எலியா அவர்களுடைய தலைகளை வெட்டினான், அந்த மத்திய வேலையில், 400 பேர்களுடைய தலைகளை வெட்டி, நடந்து சென்று மலையின் மீது அமர்ந்தான். "இப்பொழுது, நான் மழைக்காக ஜெபிக்க போகிறேன்" என்றான். மூன்று வருடம் ஆறு மாதங்கள்... [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி] மழை பெய்து. அவன் தன்னுடைய தலையை தன்னுடைய சிறிய எலும்பான முட்டிகளுக்கு நடுவே வைத்து, ஜெபித்தான், "ஓ தேவனே, மழையை அனுப்பும்” என்றான். "கேயாசி, மலையின் உச்சிக்கு சென்று சமுத்திர முகமாக மேகம் எதும் தெரிகிறதா பார்" என்றான். கேயாசி மேலே சென்று, "ஒரு அடையாளமும் இல்லை” என்றான். ஓ. என்னே. அவிசுவாசம் எப்படியாய் அங்கே பிடித்து வைத்திருக்கும். ஆனாலும் அவர் இன்னமும் தேவனாகவே இருக்கிறார்." "ஓ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனே ஜெபத்தைக் கேளும்" [ஒலி நாடாவில் காலியிடம் ஆசி] ....... கேயாசி, திரும்ப போ" என்றான். "நல்லது, நான் இப்பொழுது தான் கீழே வந்தேன்” "திரும்ப போய். மறுபடியும் பார்" "வெண்கலம் போலிருக்கிறது; மழைக்கான எந்த அடையாளமும் இல்லை". "அங்கேயே நில்", மறுபடியும் தன்னுடைய தலையை கீழே போட்டு, "ஓ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனாகிய கர்த்தாவே எங்களுக்கு மழையை அனுப்பும்". "மறுபடியும் மேலே போ" "எந்த மாற்றமும் இல்லை" 30. ஏழு முறை அவன் மேலே சென்றான். சிறிது நேரம் கழித்து கேயாசி கீழே வந்து, "ஓ, என்னே, நான் அங்கே ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனை சிறிய மேகம் எழும்புகிறது" என்றான். அவிசுவாசம் அங்கே எவ்வளவு சட்டென்று கூறியிருக்கும், "உங்களால் எனக்கு அவ்வளவுதான் செய்ய முடியுமா, உங்களால் எனக்கு அவ்வளவுதான் உதவி செய்ய முடியுமா, ஏன், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்”. ஆனால் எலியாவிற்குள்ளாக இருந்த ஏதோவொன்று அது தேவனுடைய அடையாளம் என்பதை அறிந்திருந்தது. "நல்லது, கடந்த இரவு நான் கூட்டத்திற்கு சென்றிருந்தேன்; எனக்கு தலைவலி இருந்தது, ஒருவாரமாக அல்லது இரண்டு வாரமாக, ஒரு மாதமாக வியாதியாயிருந்தேன். கொஞ்சம் நன்றாக உணர்ந்தேன், ஆனால் முழுவதுமாக அல்ல. எனக்கு பின்னின கையிருந்தது; என்னால் என் விரல்களை மட்டுமே நகர்த்த முடிந்தது, ஆனால் என்னுடைய, அது..." ஓ. சகோதரனே, அவிசுவாசம் அங்கே எவ்வளவு சட்டென்று வேலை செய்கிறது. "ஒ. என்னால் கொஞ்சமாக பார்க்க முடிகிறது; நான் குருடாயிருந்தேன், ஆனால் என்னால் கொஞ்சம் தான் பார்க்க முடிகிறது. ஆனால் நான் இன்னும் கொஞ்சம் கடினமாக முயற்சித்திருந்தால் அப்போதே செய்திருப்பேன்" ஓ, பரிதாபத்திற்குரியவனே... உன்னை என்னவென்று அழைப்பது என்றே எனக்கு தெரியவில்லை. நீ கிறிஸ்தவனாக இருக்க சாக்குபோக்கு சொல்லுகிறாய். அது சரி. 31. எலியா அப்படி செய்யவில்லை. எலியாவுக்கு அந்த முதல், மிக மிக சிறிய அடையாளம் கிடைத்ததுமே, அவன் எழுந்து நின்று "அல்லேலூயா, மிக அதிகமான.. மழைக்கான தார்ப் பாய்களை கட்டு, எழுந்து பார். பெருமழையின் இரைச்சலை நான் கேட்கிறேன்" என்றான். ஆமென். என்னால் என் விரல்களை அசைக்க முடிந்தால், "அல்லேலுயா. என்னுடைய ஊன்று கோல்களை என்னை விட்டு எடுத்துப் போடு: இதோ நான் வருகிறேன். மருத்துவரே, என்னுடைய ரசீதை விடுகிறேன்; எனக்கு இனிமேல் நான் செலுத்த தேவையில்லை. மருத்துவரே, நீங்கள் செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி. உங்களுடைய சேவை இனிமேல் அது எனக்கு தேவையில்லை. நான் பெருமழையின் இரைச்சலை கேட்கிறேன். ஆம், ஐயா. அது இப்போதே மழைக் குழாயின் வழியாக கீழே வருகிறது, நான் சரியாக அந்தக் குழாயின் துவாரத்தில் நிற்க போகிறேன், நின்று அதிலுள்ள எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள போகிறேன்,' பாருங்கள் -? ஓ. அவன் தயாராக இருந்தான். அவிசுவாசம் எவ்வளவு சட்டென்று பிடித்துக்கொள்கிறது, மேலும் ஒருவேளை அந்த தகப்பன்... அந்த காரணத்தால் தான் அவன், "உம்மால் முடிந்தால், உம்மால் எங்களுக்கு ஏதும் செய்ய முடிந்தால்" என்றான். எல்லாம் சரி. இப்பொழுது, இயேசு அவனோடு உரையாட அவனிடம் நடந்து சென்றார். கிணற்றண்டையில் அவர் அந்த ஸ்திரீயிடம் உரையாடியது போன்று. "எவ்வளவு நாளாக பிள்ளை இப்படி இருக்கிறான்-?' என்று கேட்டார். 'ஒ', அவன் "சிறு வயது முதல்” என்றான். ஒரு முறை அவருடைய கண்களை நோக்கி பார்த்தவுடன், அவனுக்குள்ளாக ஏதோவொன்று வந்தது. அப்பொழுது அவன் “எங்கள் மீது இரக்கமாயிரும்" என்று கூறினான். 32. அவன் இயேசுவின் முகத்தை ஒருமுறை நோக்கி பார்த்தவுடன், அது மனதை படிப்பது அல்ல என்று அவனால் கூற முடிந்தது. வேறு யாரிடமும் இல்லாத ஏதோவொன்று அந்த நபரிடம் இருக்கிறது என்று அவனால் சொல்ல முடிந்தது. எந்தவொரு மனிதனும் அல்லது பெண்ணும் சிலுவையை ஒருமுறை நோக்கி பார்த்தால்... அன்றொரு நாளில்... என்னுடைய நான்கு சக்கர வாகனத்தின் முன் கண்ணாடியில் நான் ஒரு பழைய சிலுவையை வைத்திருக்கிறேன். 'சகோதரன் பிரான்ஹாமே, அது கத்தோலிகர்களின் சிலுவை போன்று இருக்கிறது" என்று எத்தனை பேர் என்னிடமாக கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எப்பொழுதாவது கத்தோலிக்கர்களுக்கு சிலுவைக்கான பிரத்தியேக உரிமை கிடைத்ததா-? எப்பொழுதிலிருந்து சிலுவை கத்தோ லிக்கர்களின் விசுவாசத்தின் அடையாள சின்னமானது-? சிலுவை கிறிஸ்தவர்களின் விசுவாசத்தின் அடையாள சின்னமே தவிற கத்தோலிக்கர்களின் அடையாள சின்னமல்ல. இல்லை ஐயா. என்னுடன் செல்லர்ச்பர்கிலிருந்து பயணம் செய்த ஏதோவொரு நபர் "சிலுவையை ஏன் நீர் தொங்கவிட்டிருக்கிறீர்-?" என்றான். ஒருவிதத்தில் என்னை மட்டம் தட்டிக் கொண்டிருந்தான். எப்படியாயினும் அவ்வாறு செய்ய அவர்கள் விரும்புகின்றனர். அதை நான் கண்டுகொள்வதே இல்லை, அவரை அவர்கள் அப்படி செய்யாத வரையில் நான் அதை கண்டு கொள்வதில்லை. 33. அப்பொழுது ஏன் சிலுவையை அங்கே தொங்கவிட்டிருக்கிறீர்-?" என்றான். நான் கூறினேன், "ஏன் என்று உனக்கு தெரியுமா-? இந்த தேசத்தில், கோடை காலங்களில், ஒவ்வொரு முறையும் நான் என் தலையை திருப்பும் போது, முற்றத்திலோ அல்லது தெருவிலோ அல்லது எங்காவது ஒரு பெண் நிர்வாணமாக நின்றிருப்பாள். அதை பார்ப்பதற்கு பதிலாக நான் சிலுவையை பார்ப்பேன். ஆமென்" என்றேன். அதற்கு மேல் அவன் ஒன்றுமே கூறவில்லை. நான் கூறினேன், "இப்பொழுது, நான் எங்கே மீட்கப்பட்டேன் என்பதை காண்கிறேன். அங்கே அவருடைய தழும்புகளை நான் கண்டு, நான் சுகமானேன், முன்னொரு காலத்தில் நான் குருடாயிருந்தேன், எங்கேயும் பார்ப்பதற்கு எனக்கு கண்கள் இல்லாதிருந்தது. அவர் எனக்கு சுகமளித்தால் நான் சரியானதை மட்டுமே பார்ப்பேன் என்று அவருக்கு வாக்களித்தேன். சிலுவை தான் பார்ப்பதற்கு சரியான ஒன்று என்பதை நான் அறிவேன். நான் கல்வாரியை நோக்கி பார்க்கிறேன். அது என்னுடைய நினைவு சின்னம், அங்கே என்னுடைய கர்த்தர் மரித்தார், அவர் என்னை சுகப்படுத்தினார். அந்த சிலுவையில் தான் அவர் என் பாவங்களை மன்னித்தார். அங்கே அந்த சிலுவையில் தான் அவர் என்னுடைய எல்லா கவலைகளையும் என்னை விட்டு எடுத்துப் போட்டார், அந்த சிலுவையில்தான் அவர் தம்முடைய தழும்புகளால் என்னை தகமாக்கினார். நான் கூறினேன், 'நான் அவ்வாறு பார்க்கும் போது, என் தலையை திருப்பி நான் சிலுவையை பார்ப்பேன்' என்றேன். எல்லாம் சரி. நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. அதை பற்றி பல காரியங்கள் இருக்கிறது. ஒரு முறை சிலுவையை பாருங்கள், அது எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். 34. இப்பொழுது, இந்த மனிதன் கர்த்தராகிய இயேசுவின் முகத்தை நோக்கி பார்த்த போது, அவர் அபிஷேகிக்கப்பட்டிருந்தார். அவர் அபிஷேகிக்கப்பட்டிருந்த தேவன். இங்கே அவர் நின்றிருந்தார், அபிஷேகிக்கப்பட்ட மனிதனாக, மனிதனுக்குள் தேவனாக நின்றிருந்தார். அவர் அதை செய்த போது, ஏதோவொன்று அந்த மனிதனை பிடித்தது...-?... அவன், "எங்கள் மீது இரக்கமாயிரும்" என்றான். இப்பொழுது, அவன் சரியான இடத்திற்கு வந்தான். அவன் இரக்கத்தை கோரும் இடத்திற்கு வந்தான். அவன் இரக்கத்தின் சிங்காசனத்திற்கு வந்தான். அந்த ஒரே வழியில் தான் நீங்கள் தேவனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள முடியும். அதாவது இரக்கத்தின் சிங்காசனத்திற்கு வருவது, நியாயத்தீர்ப்பிற்கு வருவதல்ல, சுயத்தின் மீது வருவதல்ல, ஆனால் தேவனுடைய இரக்கங்களின் மீதாக வருவதே. இப்பொழுது, அவன் சுகமளிக்கும் இடத்தில் இருந்தான். அதில் 'முடிந்தால்' என்று எதுவுமே இல்லை. அவன் அதை இயேசுவின் மீது வைத்து விட்டான். கவனியுங்கள், "ஐயா" என்று மறுபடியும் கூறவே இல்லை. இப்பொழுது அவன் ஏதோ சற்று வித்தியாசமாக அழைத்தான். அப்பொழுது இயேசு மீண்டுமாக அதை அவன் மீது வைக்கிறார். அவர், "ஓ, உன்னால் விசுவாசிக்க கூடுமா-? உன்னால் பாஸ்டர், ரபி ஜோன்சை விட்டு விட உன்னால் முடியுமா-? இந்த எல்லா சந்தேகங்களையும் துரத்திவிட முடியுமா-? உன்னால் இப்பொழுது விசுவாசிக்க முடியுமா-?" என்றார். 35. அந்த தகப்பன் அவருடைய முகத்தை பார்த்து, கன்னங்களில் கண்ணீர் வடிய கூறினான், ஏதோவொன்று அவனை தாக்கியிருந்தது. அந்த க்ஷனத்திலே அவனுடைய இருதயத்தில் ஒரு மாற்றம் வந்திருந்தது. அவன், "ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். என்னை மன்னியும்" என்றான், பல வார்த்தைகளால், "என்னுடைய அவிசுவாசங்களை மன்னியும், இந்த எல்லா நேரங்களிலும் நான் பரிசேயர்களை தான் நம்பினேன், சீஷர்கள் தோல்வியடைந்த போது நான் சந்தேகித்தேன் என்னை மன்னியும், ஆண்டவரே. என்னுடைய அவிசுவாசங்களை மன்னியும்" என்றான் கண்ணீர் கீழே வடிந்து கொண்டிருக்க இதை கூறினான். தேவனுடைய ஆவி அவனுடைய இருதயத்தை தொட்டிருந்தது, அவன், "ஆண்டவரே நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய அவிசுவாசங்களை மன்னியும் அல்லது வேதாகம வசனம் என்னவென்றால், "என்னுடைய அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்," ஆனால் அது "என்னுடைய அவிசுவாசங்களை என்பதாயிருக்கிறது. அந்நிலைக்கு அவன் வந்தான். அது என்ன-? இப்பொழுது. கவனியுங்கள். சிறிது நேரத்துக்கு முன்பு வரை அவன் "ஐயா, உங்களால் முடிந்தால்" என்றான். ஆனால் இயேசு அவனுடைய கவனத்தை ஈர்த்த போது, அது "ஐயா" அல்ல, "ஆண்டவரே" (Capital L-o-r-d) என்றானது. என்ன நடந்தது-? அவன் இரக்கத்தின் சிங்காசனத்திற்கு அவன் இரக்கம் பெற்றான். அல்லேலூயா, நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று நினைப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்; ஒருவேளை நான் பைத்தியம் தான். என்னை இதில் தனியே விட்டு விடுங்கள். நான் இப்படி இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. பாருங்கள். "உம்மால் முடிந்தால்". பாஸ்டர், நீங்கள் சரியாக கூறினீர்கள் என்று நான் நம்புகிறேன். "உம்மால் முடிந்தால்". அவர் அவனை பார்த்தார். 'இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று" என்றார். அவன், "சிறு வயது முதல்" என்றான். அவன், "எங்கள் மீது இரக்கமாயிரும்" என்றான். இரக்கத்தின் சிங்காசனத்தில் அவன் மன்னிப்பை பெற்றான். மன்னிப்பை கேட்டு, மனம் திரும்பினான். இப்பொழுது, "ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய அவிசுவாசங்களை மன்னியும்" என்றான். ஆண்டவரே, "ஆண்டவரே" என்றால் "சட்ட ரீதியாக உடைமைக்கான முழு சொந்தகாரர்" என்று அர்த்தம்....-?... அதாவது நான்.... *******